உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

அன்னூர்:அன்னூர் வட்டாரத்தில், தை அமாவாசையை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், அருந்தவச் செல்வி அம்மன் சன்னிதியில், திரளானோர் அம்மனை வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பிள்ளையப்பம் பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில்பாளையம், கவைய காளியம்மன் கோவிலில், குலதெய்வ வழிபாட்டு குழுவினரும், பொதுமக்களும்அம்மனை வழிபட்டனர்.அன்னூர் தென்னம்பாளையம் ரோடு மாரியம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அதே வளாகத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !