உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து இடிக்கும் நிகழ்ச்சி

ஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து இடிக்கும் நிகழ்ச்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட  அமுதவல்லியம்மன் சமேத அமுதலிங்கஷே்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், வால சுப்பிரமணியர் கோயில், சந்தி வீர சாமி கோயில், சித்தி விநாயகர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், செங்கோட்டை முனிஸ்வரர் கோயில், முத்து விநாயகர் கோயில், பருத்தி விநாயகர் கோயில்  என ஒன்பது கோயில்களின் கும்பாபிஷேகம் ஜன.30ம் தேதி காலை 9.30 – 10.30 மணிக்குள் நடக்கிறது. உள்ளது. இதற்கான  பூஜைகள்   நடந்து வரும் நிலையில்  நேற்று  விமான ஸ்துாபில் சாற்றுவதற்கு கலசத்தில் வரகு தானியம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து கருவறையில் உள்ள பீடத்தில் 8 வகையான மருந்துகளை   சாற்ற  உரலில் கொட்டி இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், அவரது மனைவி சசிகலா ஆகியோர் மருந்து இடித்தனர். உறவின்முறை   நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !