சுப்ரமணிய சுவாமிக்கு 11 பவுனில் தங்க கிரீடம்
ADDED :2239 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, 11 பவுனில், முருகப்பெருமானுக்கு கிரீடம் மற்றும் இரண்டு கரங்கள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி ஆடிக்கிருத்திகை அபிஷேக விழா அறக்கட்டளை மற்றும் விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளை சார்பில், சுப்ரமணிய சுவாமிக்கு தங்க கிரீடம் மற்றும் இரண்டு கரங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின், தங்க கிரீடம் மற்றும் இரண்டு கரங்கள், சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வழங்கப்பட்டன.அறக்கட்டளையினர் கூறுகையில், சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. விழாவையொட்டி, நான்கு லட்சம் ரூபாய் செலவில், 11 பவுனில், தங்க கிரீடம் மற்றும் இரண்டு கரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன, என்றனர்.