கடவுளின் வரலாறு இந்து மதத்தில் அதிகம் உள்ளதே ஏன்?
ADDED :2148 days ago
இந்து மதம் எப்போது தோன்றியது என யாராலும் சொல்ல முடியாது. இந்து மதமே உலக மதங்களின் முன்னோடி. மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்பதை ஒரு மன்னரைப் போல வேதம் கட்டளையிடுகிறது. அதே கருத்தை ஒரு மனைவியைப் போல புராணம், இதிகாசங்கள் அன்பு வழியில் உணர்த்துகின்றன. பன்னிரு திருமுறை, திவ்விய பிரபந்தம் என்று இலக்கியங்கள் நண்பன் போல சொல்கின்றன. இப்படி காலத்திற்கு ஏற்ப உருவானதால் நம்மிடம் கடவுளின் வரலாறு, திருவிளையாடல்கள் அதிகமாகி விட்டன.