உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 1ல் செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

வரும் 1ல் செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

கலசப்பாக்கம்: உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி வரும், 1ல் கலசப்பாக்கம் செய்யாற்றில் நடக்க உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் வரும், 1ல் ரதசப்தமியை முன்னிட்டு, செய்யாற்றில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடக்க உள்ளது.இதை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கலசப்பாக்கம் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் எழுந்தருள்வார். அதே நேரத்தில், கலசப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து தீர்த்தவாரி நடக்கும். இதில், கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, தென்மாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதி செய்தல், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, தடுப்புகள் கட்டுதல், ஆற்றை தூய்மை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள், பி.டி.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !