பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் திருமஞ்சனம்
ADDED :2405 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் தை வெள்ளியை முன்னிட்டு மகாலட்சுமி தாயாருக்கு திருமஞ்சனம் பூஜை நடந்தது. பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட அபிஷேக பொருட்களில் அபிஷேகம் மற்றும் மாலையில் ஊஞ்சல் சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.