குமரகோட்டம் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற வசதி
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு வசதியாக, 1.75 லட்சம் ரூபாய் செலவில் புதிய தீபம் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இதற்கு முன் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.சிலர் அவர்கள் விரும்பிய இடத்தில் விளக்கு ஏற்றியதால், கோவில் தரைதளம் எண்ணெய் படர்ந்து காணப்பட்டது.அவற்றை தவிர்க்கும் வகையில், ஒரே இடத்தில் ஆறு விளக்குகள் மற்றும் பெரிய விளக்கு ஒன்று பொருத்தப்பட்ட புதிய விளக்கு கோவிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தனியார் பங்களிப்பில், 1.75 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்த விளக்கு பயன்பாட்டிற்கு வந்தது. பக்தர்கள் கொண்டு செல்லும் எண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை அந்த விளக்கில் ஊற்ற வேண்டும்.இதனால், பக்தர்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய தீபத்தில் எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.