பெருமாள் கோவிலில் பிப்.,7 ல் தேர்த்திருவிழா
ADDED :2129 days ago
அன்னுார்:மொண்டிபாளையம், பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படும், மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில், 58ம் ஆண்டு தேர்த்திருவிழாவில், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அருள்பாலித்தார். சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் அதிகாலையில், பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 8:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு அன்ன வாகனத்தில், சுவாமி திருவீதியுலா நடந்தது. நாளை வரை, தினமும் காலை 8:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும், சுவாமி திருவீதியுலா நடக்கிறது.வரும், 5ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. வரும், 7ம் தேதி, காலை 11:00 மணிக்கு, தேரோட்டம் துவங்கி நடக்கிறது.