உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன்குன்று கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா

குமரன்குன்று கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா

அன்னுார்:அன்னுார் அடுத்த குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கலச பூஜை, பலி பீட பூஜை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சுப்பிரமணிசாமி, வள்ளி தெய்வானை சமேதராக கிரிவலம் நடந்தது.இன்று முதல் 7ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணிக்கு சுவாமி கிரிவலம் வருதல் நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு 10:00 மணிக்கு அம்மன் அழைப்பும், அபிஷேக பூஜையும் நடக்கிறது. வரும், 8 ம்தேதி, அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணமும், 7:30 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதலும் நடக்கிறது. அன்று மாலை 5:00 மணிக்கு, தைப்பூச தேரோட்டம் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !