வடபழநி கோவிலில் திருப்புகழ் இசை கச்சேரி
சென்னை: வடபழநி முருகன் கோவிலில், தை கிருத்தி கையை முன்னிட்டு, திருப்புகழ் சத்சங்கம், கந்தர் சஷ்டி பாராயணம் இன்று மாலை நடக்கிறது.
சென்னை, வடபழநி முருகன் கோவிலில், பாத ரட்சையுடன் முருகன் அருள்பாலிப்பது; சுவாமி தாமரை பீடத்தின் மீது இருப்பதும்; வலது பாதத்தை முன் வைத்து இருப்பதும் சிறப்பு.தை கிருத்திகை தினத்தில், விரதமிருந்து முருகனை வணங்கினால், நிச்சயம் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் தை கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.இதை முன்னிட்டு, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருதேவின் சீடரான ஸ்ரீதேஜ் வழங்கும் திருப்புகழ் சத்சங்கம், கந்தர்சஷ்டி பாராயணம், இன்று மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று, சிறப்பிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.