உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யா கோவில் ராஜகோபுர ஆண்டு திருவிழா: 500க்கும் மேற்பட்டோர் பொங்கலிட்டு வழிபாடு

அய்யா கோவில் ராஜகோபுர ஆண்டு திருவிழா: 500க்கும் மேற்பட்டோர் பொங்கலிட்டு வழிபாடு

மணலிபுதுநகர்: அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், ராஜகோபுர ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கலிட்டு வழிபட்டனர்.

மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும், பிப்ரவரி மாதத்தில், ராஜ கோபுர ஆண்டு திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இவ்வாண்டு, நேற்று காலை, பால் பணிவிடை; மதியம் உச்சிப்படிப்புடன் ராஜ கோபுர ஆண்டு திருவிழா துவங்கியது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், கோவில் வளாகத்தில், பால் அன்னம் எனும் விசஷே பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.செங்கல் அடுப்பில், பனை ஓலையில் தீ மூட்டி, பாத்திரத்தில், பச்சரிசி, பச்சை பயறு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து, பால் அன்னம் எனும் பொங்கலிட்டனர். இதில், உப்பு, இனிப்பு ஏதும் சேர்ப்பதில்லை.இவ்விழாவை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி துவக்கி வைத்தார். பால் பணிவிடை, உகப்படிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, வைகுண்ட தர்மபதி இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் நிகழ்வுடன், திருவிழா நிறைவுற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !