தைப்பூச தேர்த்திருவிழா துவக்கம் மலைக்கோவிலில் கொடியேற்றம்
திருப்பூர்:மங்கலம் அடுத்த மலைக்கோவில் ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது.நேற்று காலை திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. மாலை எட்டு திக்கு பாலகர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று முதல் 5ம் தேதி வரை காலை மற்றும் மாலை இரு நேரமும், சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி, மூலவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. வரும் 6ம் தேதி, மயில் வாகனம் மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். 7ம் தேதி யானை வாகன பவனி, மாலையில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 8ம் தேதி, காலை 6:00 மணிக்கு விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசாமி ரதாேராஹணம் என்ற திருத்தேர் எழுந்தருளும் நிகழ்வும் மாலை 3:00 மணிக்கு திருத்தேர் கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 9ம் தேதி, மாலை 7:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன பவனியும், 10ம் தேதி மதியம் 12:00 மணிக்கு மகா தரிசனம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.