மாகாளியம்மன் பொங்கல் விழா பக்தர்கள் தீர்த்த ஊர்வலம்
ADDED :2129 days ago
திருப்பூர்:திருப்பூர், கோட்டைக்காடு ஸ்ரீ செல்வ விநாயகர், கோட்டை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா ஜன., 26ம் தேதி கிராமசாந்தி ஊர்வலத்துடன் துவங்கியது. 28ல் அம்மனுக்கு அபிஷேகம், இரவு பூச்சாட்டுதலும் நடந்தது.நேற்று மாலை மாகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து இரவு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நாளை (4ம் தேதி) கணபதி ேஹாமம், காப்புகட்டுதல் காலை நடக்கிறது. இரவு வாணவேடிக்கையுடன் கும்பம் எடுத்து ஊர்வலம், அம்மை அழைத்தல், படைக்கலம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 5 ம் தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா நடக்கிறது.