உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடி திருவலிதாயம் கோவிலில் தேர் திருவிழா

பாடி திருவலிதாயம் கோவிலில் தேர் திருவிழா

அம்பத்துார்: பாடி, திருவலிதாயம் கோவிலில், தை கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி தேர் திருவிழா நடந்தது. இதில், பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை அதிர செய்தது. பாடியில், 32 சிவ ஸ்தலங்களில் ஒன்றான, 800 ஆண்டுகள் பழமையான திருவலிதாயம் கோவில் உள்ளது. தை கிருத்திகையை முன்னிட்டு, நேற்று சுவாமி அலங்கரிக்கப்பட்டு, 12 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் முக்கிய வீதிகளில், திருவீதி உலா நடந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, சந்தனக் குடம், தீர்த்த குடம், தேன் குடம், பஞ்சாமிர்த குடம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் செய்தனர். பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்டவற்றை இழுத்து சென்றனர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை அதிர செய்தது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !