குன்றத்தில் இன்று தெப்பத்திருவிழா
திருப்பரங்குன்றம், பிப், 4 – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைக்காா்த்திகை, தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடந்தது. இன்று (பிப்., 4) தெப்பத் திருவிழா நடக்கிறது.
சுவாமி, தெய்வானை ஜி.எல்.டி., ரோடு தெப்பக்குளம் கரையில் எழுந்தருளினா். சிவாச்சாா்யாா்கள் யாகம் வளா்த்து பூஜை நடத்தினா்.
சுத்தியல், அாிவாள், உளி ஆகியவற்றிற்கு தீபாராதனை முடிந்து, தெப்பக்குளம் தண்ணீாில் அமைக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் முகூா்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
பின் 16 கால் மண்டபம் முன் சிறிய வைரத் தோில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினா். சிறப்பு பூஜைக்கு பின் தோ் சக்கரங்களில் பூசணிக்காய்கள் வைத்து தேங்காய் உடைக்கப்பட்டது.
பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. இன்று தெப்பத் திருவிழா நடக்கிறது.