புனித அருளானந்தர் தேர் பவனி
ADDED :2423 days ago
திருவாடானை:திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச்சில் மறைசாட்சி பெருவிழா ஜன.27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது. அருளானந்தர் அமர்ந்த அலங்கரிக்கப்பட்ட தேர்முக்கிய வீதிகள் வழியாக சென்றது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஓரியூர், புலியூர், புல்லுார், மண்டலகோட்டை,வெள்ளையபுரம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.