கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் தேரோட்டம்
ADDED :2128 days ago
சென்னை: சென்னை, பூங்கா நகர், கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில் திருத்தேர் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சென்னை, பூங்கா நகர், கந்த கோட்டம் என அழைக்கப்படும் முத்துக்குமார சுவாமி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரில் தேவசேனாபதி சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.