ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை கோலாகலம்
ADDED :234 days ago
திருப்பூர்: தை மாதம் விசாக நட்சத்திர நாளான நேற்று திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது. 63 நாயன்மார்கள் கல் மண்டபத்தில், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு மஹா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், திருநீலகண்ட உற்சவமூர்த்தி சிறிய சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். மண்ணால் செய்த புதிய திருவோடுகள் வைத்து, அதில் பழங்களை நிரப்பி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கனகசபை மண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநடராஜரிடம் சென்றடைந்தார்; மகா தீபாராதனை நடந்தது. அர்த்தஜாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.