கோயில் வருடாபிஷேக விழா
ADDED :195 days ago
கூடலுார்: கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் வருடாபிஷேக விழா மங்கள இசையுடன் துவங்கியது. சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. அனைத்து மும்மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. வள்ளி தேவசேனா சமேத கூடல் சுந்தரவேலருக்கும் உடன் பரிவார தெய்வங்களுக்கும் நடந்த வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.