மதுரை மீனாட்சி அம்மன் தெப்பத்திருவிழா கோலாகலம்
ADDED :2075 days ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவின் 12 நாளான இன்று (பிப்.,8) முத்தீஸ்வரர் கோயிலிருந்து மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர். தெப்பத்தை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தெப்ப உற்ஸவத்தை பார்க்க வருவோருக்கு அனுப்பானடி சந்திப்பு மற்றும் குருவிக்காரன் சாலை முதல் 16 கால் மண்டபம் வரை பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.