உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா வைரஸ் பாதிக்காமல் தடுக்க கர்நாடகாவில் சிறப்பு பூஜை

கொரோனா வைரஸ் பாதிக்காமல் தடுக்க கர்நாடகாவில் சிறப்பு பூஜை

பெங்களூரு: கொரோனா வைரஸ் பாதிக்காமல் தடுக்கக் கோரி கர்நாடகாவில் உள்ள முக்கிய கோயில்களில் நேற்று (பிப்.,07) இரவு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் கொரோனா வைரசிற்கு இதுவரை

700க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றிற்கு சராசரியாக 80 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். சுமார் 50,000 பேர் வரை வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கண்டறியப்பட்ட இந்த உயிர்கொல்லி வைரஸ், தற்போது வரை சுமார் 20 நாடுகளில் பரவி உள்ளது. மேலும் பரவுவதை தடுக்க பல நாடுகள் சீனர்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றன. சீனா சென்று திரும்பிய இந்தியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காக்க கோரி கர்நாடகாவில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோயில், துமக்குரா சனீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் நேற்று இரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பூத பைரவி யாகம் நடத்தப்பட்டு, தீ மிதி வைபவமும் நடத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !