கடலுார் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தரகள் தரிசனம்
ADDED :1 days ago
கடலுார்: சிவகாமி அம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது.
கடலுார், உண்ணாமலை செட்டிசாவடி சிவகாமி அம்மன் கோவிலில் 67ம் ஆண்டு திருமாவிளக்கு பூஜை மற்றும் ஆராதனையையொட்டி நேற்று காலை மாவு இடிக்கும் பூஜையும், பெண்ணையாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்ததை தொடர்ந்து, தீபாராதனை, கரகம் வீதியுலாவும் நடந்தது. திருமாவிளக்கு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. அம்மன் சி்றப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 10 ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தரகள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று கும்பல் படையல் நடந்தது. ஏற்பாடுகளை குலாலர் மரபினர் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனர்.