விருதுநகரில் தைப்பூசத் தேரோட்டம்
ADDED :2064 days ago
விருதுநகர்:விருதுநகரில் தைப்பூசத்தை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. நேற்று முன் தினம் தைப்பூசத்தன்று திருக்கல்யாணம் நடந்தது.
இதையடுத்து சுவாமி முருகன் வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகமும் செய்யப்பட்டது. சுவாமி முருகன், வள்ளி, தெய்வானையுடன் நகரின் முக்கிய மெயின் பஜார், தெப்பம், தெற்கு ரத வீதி, மேல ரதவீதி ஆகிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.