பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2167 days ago
பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், கும்பதீர்த்தத்தில் அபிஷேகம், ஆராதனை நடந்தது. வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தெற்கு அக்ரஹாரம், வடக்குஅக்ரஹாரம் உட்பட நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா சென்றார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.