உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கருங்கலங்குறிச்சி கிராமத்தில் வல்லபை மகாகணபதி கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமம்,நவக்கிரக பூஜையுடன் தொடங்கியது.விநாயகருக்கு பால்,சந்தனம்,பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.கிராமத்தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.கிராமம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !