திருவேடகம் ஏடகநாதர் கோயில் தெப்பத்திருவிழா
ADDED :2119 days ago
சோழவந்தான்: திருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோயில் பிரம்மதீர்த்த தெப்பத் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சுவாமி, அம்மனை கோயிலில் இருந்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார்கள் கணேசன்,பரசுராம் பட்டர், சிறப்பு அபிஷேக, தீபாராதனை செய்தனர். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. பின் சப்பர மின்விளக்கு அலங்காரத்தில் ஏலவார் குழலியம்மன் ஏடக நாதர் சுவாமி பிரம்மதீர்த்த தெப்பத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் அருள் பாலித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சேவுகன், நிர்வாக அதிகாரி இளஞ்செழியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.