உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) உடல்நிலை திருப்தி மனநிலை அதிருப்தி 65/100

மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) உடல்நிலை திருப்தி மனநிலை அதிருப்தி 65/100

பிறர் கருத்தை மதித்து நடக்கும்  மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் உள்ளார். கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்தில் இருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இருப்பினும் குருபார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக அனுகூல பலன்களைப் பெறுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு நான்காம் இடமான வீடு, வாகனம், ஆறாம் இடமான பிணி, சத்துரு, எட்டாம் இடமான ஆசை நிறைவேறுதல் ஆகியவற்றை பார்க்கிறார். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர்.  புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மற்ற தொழிலதிபர்களும் விடாமுயற்சியுடன் குறுக்கீடுகளை முறியடித்து முன்னேறுவர். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

வியாபாரிகள்:  நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் போட்டியைச் சந்திப்பதால் சுமாரான லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கும் இந்த நிலையே தொடரும். சகவியாபாரிகளின் செயல்பாட்டால் அதிருப்தி கொள்வர். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணிச்சுமை காரணமாக குளறுபடியான மனநிலைக்கு ஆளாவர். விருப்பமில்லாத பணி மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். செலவில் சிக்கனம் தேவை. குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பளிப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்ப அமைதிக்கு வழியில்லை. செலவினங்களை வகைப்படுத்தி திட்டமிடுதலுடன் செலவழிப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் மந்தநிலைக்கு உள்ளாவர். கணவர், தோழியர் வகையில் எதிர்பார்த்த உதவி குறைந்த அளவில் கிடைக்கும்.

மாணவர்கள்:  இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் படிப்புச் செலவுக்கான பணத்தைப் பெறுவதில் தாமதநிலை அடைவர். கவனச்சிதறல் காரணமாக தரத்தேர்ச்சி விகிதம் குறையும். மற்ற துறை மாணவர்களும் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்:  பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். தரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அதிக பணம் செலவாகும். அதிகாரிகளிடம் இதமாகப் பேசி மென்மையுடன் அணுகுவது நல்லது. தங்களின் லாபத்திற்காக எதிரிகள் சமரச முயற்சிக்கு முன் வருவர். சூழ்நிலைக்கு ஏற்ப ஆராய்ந்து செயல்படுவது அவசியம்.

விவசாயிகள்:  பயிர் வளர்ப்பில் நடைமுறைச் செலவு கூடும். மாற்று பயிர் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதால் ஓரளவு லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் லாபம் குடும்பத்தேவையை நிறைவேற்ற உதவும். நிலம் தொடர்பான பிரச்னையில் சமரச முயற்சிக்கு வாய்ப்புண்டு.

பரிகாரம்: லட்சுமிநரசிம்மரை வழிபடுவதால் குடும்பத் தேவை நிறைவேறும் விதத்தில் வருமானம் கூடும்.

செல்ல வேண்டிய தலம்: விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் லட்சுமிநரசிம்மர் கோயில்

பரிகாரப்பாடல்: ஆடிப் பாடி அகம் கரைந்து
இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே.

வக்ர கால பலன்: ராசிநாதன் புதனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான்10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இதனால் மற்றவர்களின் செயல்பாடு கண்டு மனவருத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் பேச்சை விரும்பி நடந்தவர்கள் கூட விலகிச் செல்ல வாய்ப்புண்டு. குடும்பச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லும். திட்டமிடுதல் இல்லாமல் அன்றாடப்பணிகளில் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடின அலைச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் மீதான நம்பிக்கை குறையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு அதிருப்தி தரும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகரிப்பதோ, புதிய முயற்சி மேற்கொள்வதோ கூடாது. வியாபாரிகள் வாடிக்கையாளர் அதிருப்திக்கு ஆளாகலாம் கவனம். பணியாளர்கள் லுகை பெறுவதில் தாமதம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !