உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் மகாமுனி பூஜை வழிபாடு

மாசாணியம்மன் கோவிலில் மகாமுனி பூஜை வழிபாடு

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் கடந்த, 9ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகாமுனி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மகாமுனி மாசாணியம்மன் சன்னிதானத்துக்கு முன் பெரிய மீசை, கையில் ஆயுதத்துடன் கம்பீரமாக காட்சியளித்தார். மகாமுனிக்கு படையல் இடப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !