ஆதியோகி ரத ஊர்வலம்
ADDED :2069 days ago
பழநி, மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநியில் ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி ரத ஊர்வலம் நடந்தது.கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்.21 ல் மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி ஆதியோகி ரத ஊர்வலம் பழநிக்கு வந்தது. நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. பொதுமக்கள் பலரும் ரதத்தை பார்வையிட்டனர்.