உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை

நடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆதிமூல நாதர் சுவாமிக்கு, கடந்த 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது.

அஸ்வ பூஜைக்காக, சென்னையை சேர்ந்த தினகரன் என்ற பக்தர், அஸ்ஸாமில் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கிய வெள்ளை குதிரையை, கோவிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வெள்ளை குதிரைக்கு ஒன்றரை வயது ஆகிறது.இந்த அழகிய வெள்ளை குதிரை, கோவிலுக்கு வரும் பக்தர்களை கவர்ந்து வருகிறது. பக்தர்கள், குதிரையை அருகில் வந்து பார்த்து, ரசித்து செல்கின்றனர். நடராஜர் கோவிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, யானை வளர்க்கப்பட்டு வந்தது. அதனை பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமத்தால், யானை வளர்ப்பு கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !