ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை
ADDED :2348 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில், உலக நன்மைக்காக 251 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக சர்வ அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்பாள் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. சன்னதியில் 251 திருவிளக்கு வைத்து பூஜை செய்தனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கோயில் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.