உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

திண்டுக்கல் : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆறு கால பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதே போல், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !