நான்கு வேதங்கள் எதை குறிப்பிடுகின்றன?
ADDED :2123 days ago
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். ‘ரிக்’ என்றால் துதித்தல் என்று பொருள். முதல் வேதமான இது இந்திரன், வருணன் உள்ளிட்ட தேவர்களை போற்றுகிறது. ‘யஜ்’ என்றால் ‘வழிபடுதல்’ யாகம் செய்து வழிபடும் முறைகள் இதில் உள்ளன. ‘சாம்’ என்றால் சந்தோஷப்படுத்துதல். பாடல் தொகுப்பான இது படிப்போருக்கு மகிழ்ச்சி தரக் கூடியது. பகவத்கீதையில் கிருஷ்ணர், ‘வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்’ என்கிறார். ‛சரிகமபதநி’ என்னும் ஏழு ஸ்வரத்தால் ஆன சங்கீதத்திற்கு சாம வேதமே அடிப்படை. நான்காவது வேதம் அதர்வணம். இது அதர்வண மகரிஷியால் உபதேசிக்கப்பட்டது. ஆபத்துக்கள், எதிரி தொல்லையில் இருந்து விடுபட உதவும் மந்திரங்களைக் கொண்டதாகும்.