உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புட்குழியில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்புட்குழியில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி பகுதியில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை காலை, 4:30 - 6:10 மணிக்குள், கொடியேற்றத்துடன்பிரம்மோற்சவம் துவங்குகிறது.முதல் நாள் காலை, பவளக்கால் சப்பரத்தில், பெருமாள் எழுந்தருளி, வீதியுலா செல்கிறார். மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில், தினமும் காலை, மாலையில், வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருள்வார். வரும், 28ம் தேதியுடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !