வீரபத்திர விரதம்!
ADDED :2388 days ago
மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க்கிழமைதோறும் ஒரு வருட காலம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவா்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளிலாவது இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் தக்கயாகப் பரணி வீரபத்திராின் மகிமையைச் சொல்லும் நூல்களைப் படித்து வணங்குவதோடு, சிவாலயங்களுக்குச் சென்று வீரபத்திரை வழிபடுவது விசேஷம். இந்த விரதம் நீங்காத தடைகளை எல்லாம் நீங்க்கும். பகையைப் போக்கும். காத்துக்கருப்பு, பில்லி, சூனியம் முதலானவற்றின் பாதிப்புகளிலிருந்து விடுதலை அளிக்கும். கிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.