சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :3 hours ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார்பேட்டையில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. ஏப். 7 ம் தேதி இரவு பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்புக்கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. ஏப். 13 வரை தினமும் மண்டகப்படி வழிபாடு நடக்கிறது. ஏப். 14 ல் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு வழிபாடுகள் நடக்கிறது. ஏப். 15 ல் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாடார்கள் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.