உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம்

பெரியகுளத்தில் கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம்

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீ மத் பாகவதம் ஆன்மிக சொற்பொழிவை சீனிவாசன் ஏழு நாட்கள் நிகழ்த்தினார். ஹரே ராம நாம கீர்த்தனம் பஜனை நடந்தது. கிருஷ்ணர், ராதைக்கு திருக்கல்யாணம், எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க வேண்டி ஹரே ராம மஹாமந்திர நாமகீர்த்தனம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !