உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தால பரமேஸ்வரி அம்மன்கோயில் மாசி சிவராத்திரி விழா

முத்தால பரமேஸ்வரி அம்மன்கோயில் மாசி சிவராத்திரி விழா

ராமநாதபுரம்:ராமநாதபும் வெளிப்பட்டணம் முத்தாலபரமேஸ்வரி கோயிலில் சிவராத்திரிவிழா பிப்.13 ல் மகாகணபதி, நவக்கிரக ஹேமத்துடன் துவங்கியது.
பிப்.14ல் காப்பு கட்டுதல், கொடி ஏற்றம் நடந்தது. விழா நாட்களில் அம்மனுக்கு தினசரி சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் மயில், காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
இரவு ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள்நடந்தது. பிப்.21 ல் முத்தாலபரமேஸ்வரி அம்மனுக்கு ஏக கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பிப். 22 ல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.23 ல் திருவிளக்கு பூஜையும், 24 ல் பால்குடம் எடுத்தல், மகா அபிஷேகம் நடக்கிறது. மார்ச் 1 ல் உற்ஸவ சாந்தி அபிஷேகம், தீபாரதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !