வனப்பகுதியில் வறட்சி சதுரகிரி பக்தர்களே உஷார்
ADDED :2051 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி வனப்பகுதியில்வறட்சியால் நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் அதற்கேற்றபடி பயணத்தை அமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை (பிப்.21) சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் மழையில்லாததால் ஓடைகளில் குளிப்பதற்குக்கூட போதுமான நீர் வரத்து இல்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீர் சிரமத்தை உணர்ந்து தங்களின் பயணத்தை அமைக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.