கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2051 days ago
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி வைகை ரோடு சக்கம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி நடந்தது.தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜைகள் செய்து விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அலுவலர் சரவணன் தலைமையில் விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.