திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிம தெப்பத்திருவிழா
ADDED :23 hours ago
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்தது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமப் பிரும்மோற்சவத் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி மாசிம ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா, சூரிய பிறையில் வீதியுலா, சந்திரபிறையில் வீதியுலா, பூதவாகனத்தில் சுவாமி வீதியுலா, வசந்த மண்டபத்திலிருந்து தியாகராஜர் உன்மத்த நடனம், தேர்திருவிழா,ஜடாயு இராணவ யுத்தம், மாசிமகா திருத்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நேற்று முன்தினம் தெப்பத்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் நாகதியாராஜன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.