பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் அழகர் பூப்பல்லக்கில் பவனி
ADDED :152 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் அழகர் பூ பல்லக்கில் விடிய விடிய வீதி வலம் வந்தார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இரவு பெருமாள் பூ பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வந்தார். அப்போது வாணியர் உறவின் முறையர்களின் பொது சபை தலைவர் செல்லம் தலைமையில் ஏராளமான திருக்கண்களில் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாள் மழைக்கு மத்தியில் நேற்று காலை 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைந்தார்.