முத்துமாரியம்மன் கோவிலுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்
ADDED :1 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், செடலணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் செல்வராஜ்நகர், முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி, இன்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 11:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.