அன்னூர் மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா
அன்னூர்: குமரகவுண்டன்புதூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
கஞ்சப்பள்ளி ஊராட்சியில், பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் நூறு ஆண்டுகளான, வேம்பு, அரசன், இஞ்சி என மூன்று மரங்கள் ஒன்றாக இணைந்து உள்ளன. இக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த மாதம், 21ம் தேதி துவங்கியது. கடந்த 28ம் தேதி மினி முடுக்கும் வைபவம் நடந்தது. இதைத் தொடர்ந்து தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 5ம் தேதி மாலை கோவிலுக்கு பக்தர்கள் அணி கூடை எடுத்து வருதலும், இரவு கரகம் எடுத்து ஆடுதலும் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் அழைத்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்குடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடைந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.