சாய்கிருஷ்ணா கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2054 days ago
கமுதி: கமுதி அருகே சாய்கிருஷ்ணா கோயிலில் வியாழன் சிறப்பு பஜனை, பூஜை சடையனேந்தல் ஊராட்சி தலைவர் மல்லிகா தலைமையிலும், கோயில் அறங்காவலர் மலைச்சாமி முன்னிலையிலும் நடந்தது.சாய் பாபாவிற்கு நெய், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட 21 வகையான அபிேஷகங்கள், திருவாரபாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் 208 விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் சாய்கிருஷ்ணா சிலைக்கு, மலர், பழம், இனிப்புகளை வழங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.இதேபோல் கமுதி எட்டுக்கண் பாலம் அருகே உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிேஷகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.