உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி திருவிழா துவக்கம் பாதுகாப்பு பணியில் 200 போலீஸ்

மகா சிவராத்திரி திருவிழா துவக்கம் பாதுகாப்பு பணியில் 200 போலீஸ்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. மஞ்சளாற்றங் கரையில் அமைந்துள்ள இக்கோயில் பூட்டப்பட்ட கதவிற்கு பூஜை செய்யப்படுகிறது. பக்தர்களால் வழங்கப்படும் நெய் மூலம் 24 மணி நேரமும் அணையா நெய் விளக்கு ஆண்டு முழுவதும் எரிகிறது. இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது. பிப்ரவரி 28- ல் நிறைவடைகிறது.இவ்விழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். திருவிழா பாதுகாப்பில் பெரியகுளம் டி..எஸ்.பி. ஆறுமுகம், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குரு வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !