உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா; மார்ச் 2ல் பால்குடம்

பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா; மார்ச் 2ல் பால்குடம்

பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து வருகிறது.

கோயிலில் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நாளை செந்தில் ஆண்டவர், ஆறுமுக பெருமானுக்கு காலை 9:00 மணி தொடங்கி அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்க உள்ளது. மார்ச் 1ல் குருவடியார் இலக்குமணனுக்கு, 50ம் ஆண்டு பொன்விழா திருச்செந்தூர் மிதிவண்டி பயணத்தையொட்டி பாராட்டு விழா, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. மார்ச் 2 அன்று வைகையிலிருந்து பால் குடங்கள் புறப்பாடாகி, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்க உள்ளது. மார்ச் 4ல் நூற்றுக்கணக்கான விரதம் இருந்த பக்தர்கள் சைக்கிளில் திருச்செந்தூர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !