விமோசன மகா கணபதி கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :147 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிவன்புரம் ஆசிரியர் காலனியில், ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புண்ணியவதனம், கலச ஆவாஹனம், மகா கணபதி ஹோமம், நவகிரக நட்சத்திர ஹோமங்கள் செய்யப்பட்டன. கலசங்களை கோவிலை சுற்றி வலம் வந்து, பைரவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அர்ச்சகர் லட்சுமி நாராயணன் சிறப்பு பூஜைகளை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். இதே போன்று, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.