உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.


திருத்தணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம் 23ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், கடந்த 4ம் தேதி அர்ஜுனன் தபசு நடந்தது. நேற்று காலை 8:45 மணியளவில், கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை, திருத்தணி சந்து தெரு நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மர் பட்டாபிஷேகத்துடன் இன்று, நடப்பாண்டிற்கான தீமிதி திருவிழா நிறைவுபெறுகிறது. ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை, விளக்கணாம்பூடி புதுார், ராஜாநகரம் கிழக்கு ஆகிய மூன்று கிராமங்களில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 18 நாட்களாக நடந்து வந்தது. இறுதி நாளான நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !