உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

பச்சைவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சைவண்ணர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், கடந்த ஆண்டு ஜூலையில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இதுவரை, 60 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. திருப்பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவில் திருப்பணிகள் செயல் அலுவலர் பூவழகி கூறியதாவது: பச்சைவண்ணர் கோவிலில் 70.12 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம், மூலவர் சன்னதி மற்றும் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்தவுடன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !